*காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு (Mohamed Zaidh) சவுதி அரேபிய இளவரசர் Fahad Bin Jalawi (President of the ICRE) ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.*



01.07.2023 சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) ஆரம்பமானது.

இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகைதந்து, 350 போட்டிகள் கொண்ட ஆரம்ப கட்டங்களுடன் போட்டிகள் நடாத்தப்பட்டன.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப் போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது சேவையை பாராட்டி சவுதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து சேவை பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவை காண சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரவர் பக்கீர் அம்சா (Pakeer Amza) அவர்களும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.