ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலக புதிய பிராந்திய பிரதிநிதியான மார்கோ டீக்சீரா வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று (06) இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது, இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக