பிசிசிஐ ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய வியாகாம் 18!


இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் , தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அடுத்த ஆண்டுகளில் இந்திய அணி 88 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது.

இதற்கான ஒளிபரப்பு உரிமைக்கான பிசிசிஐ ஏலம் இன்று நடைபெற்றது.

இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், சோனி, வியாகாம் 18 உள்ளிட்டவை களத்தில் இருந்தன. இதில் சோனி நிறுவனம் ஜீ நிறுவனத்துடன் கைகோர்த்ததால், ஏலத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள 88 போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மொத்தமாக ரூ.5,966.4 கோடிக்கு வியாகாம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ரூ. 67.7 கோடி வழங்கப்படவுள்ளது.

கடந்த முறை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தரப்பில் ரூ. 6,138 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது

கருத்துகள்