இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் மக்கள்தொகை பத்தரை பில்லியனை எட்டும்



நேற்று முன் தினம் உலக மக்கள்தொகை தினம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது.

சுமார் 200 ஆண்டுக்கு முன் உலகின் மக்கள் தொகை ஒரு பில்லியனுக்கும் குறைவாக இருந்தது.இப்போது அது 8 மடங்காகியிருக்கிறது.பாதிக்கும் மேற்பட்ட உலக மக்கள் ஆசியாவில் உள்ளனர்.ஒவ்வொரு 12 ஆண்டிலும் உலக மக்கள்தொகை சுமார் ஒரு பில்லியன் அதிகரித்திருக்கிறது.

மக்களின் ஆயுள் அதிகரித்ததும் இறப்பு விகிதம் குறைந்ததும் மக்கள்தொகை வேகமாக வளர்ந்ததற்குக் காரணங்கள். தற்போது மக்களின் சராசரி ஆயுள் 73 வயது. நல்ல சுகாதாரப் பராமரிப்பு, நல்ல உணவு ஆகியவை ஆயுள் அதிகரிக்கக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் மக்கள்தொகை பத்தரை பில்லியனை எட்டும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

கருத்துகள்