வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு!
வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
மீள் பதிவுக்காக பெரும் அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் சில வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க பதிவை புதுப்பிப்பதற்கு நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக