சந்தேகமாக நடமாடிய இளைஞனை பிடித்து, சோதனையிட்ட போது கஜமுத்துக்கள் மீட்பு

சந்தேகமாக நடமாடிய இளைஞனை பிடித்து, சோதனையிட்ட போது கஜமுத்துக்கள் மீட்பு


சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம்  விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது  கஜமுத்துக்கள்  மீட்கப்பட்டுள்ளது.


யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெள்ளிக்கிழமை(14) மாலை கைதானார். 



 அம்பாறை விசேட அதிரடிப்படை  முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படிஇச்சோதனை நடவடிக்கையானது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய  உதவி பொலிஸ் அத்தியட்சகர் கிஹான் குணரத்ன  மேற்பார்வையில்  உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எம்.  லக்மால் உள்ளிட்ட அதிகாரிகள் குழு   அம்பாறை பொலிஸ் பிரிவில் உள்ள   பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை நடத்தியது.


இதன் போது யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைதானார்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள்