இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து, கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல்
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி கேட்டார்.
இதற்கு இந்தியாவில் இன ரீதியாக பாகுபாடு இல்லை என பதில் அளித்திருந்தார். இதற்கிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஜோ பைடன் மோடியிடம் இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் எனவும், நானாக இருந்தால் வலியுறுத்துவேன் என்றும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு முன் தெரிவித்திருந்தார்.
ஒபாமா கூறிய அதே கருத்தை அந்த பத்திரிகையாளர் எழுப்பியதால், ஆன்லைனில் பத்திரிகையாளர் அச்சுறுத்தப்படுவதுடன், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ''பத்திரிகையாளர் ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து நாங்கள் அறிவோம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது'' எனத் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக