சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்


சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. 



இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து துடுபெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ஓட்டங்களுக்கு சுருண்டது.



அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 524 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது. 



இங்கிலாந்து அணியில் ஜேக் க்ராவ்லி 56 ஓட்டம், பென் டன்கட் 182 ஓட்டம், போப் 205 ஓட்டம், ஜோ ரூட் 56 ஓட்டம் எடுத்தனர்.



தொடர்ந்து 352 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 2-வது நாள் போட்டி நேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 எடுத்திருந்தது.



இந்நிலையில், இப்போட்டியில் 56 ஓட்டங்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். 



மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2-வது வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.



அந்த பட்டியலில் அலஸ்டர் குக் முதல் இடத்திலும் (31 வருடம் 357 நாட்கள்), ஜோ ரூட் 2-வது இடத்திலும் (32 வருடம் 154 நாட்கள்), சச்சின் டெண்டுல்கர் (34 வருடம் 95 நாட்கள்) 3வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் (34 வருடம் 210 நாட்கள்) 4வது இடத்திலும், ஜேக் காலிஸ் (34 வருடம் 245 நாட்கள்) 5வது இடத்திலும் உள்ளனர். 



இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்