X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன கசிவு ஏற்படவில்லை - கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை
இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான X-Press Pearl கப்பலில் இருந்து எந்தவிதமான இரசாயனங்களோ அல்லது எண்ணெய் கசிவோ ஏற்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகார சபையின் பொது முகாமையாளர் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
இதன்போது எண்ணெய் அல்லது இரசாயன கசிவு ஏற்பட்டிருந்தமைக்கான சான்றுகள் இருக்கவில்லை என இலங்கை கடற்படையினரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக