குண்டு வெடிப்பு – இலங்கை படையினர் நால்வர் காயம்!
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் இணைந்து மாலியில் பணியாற்றிய நான்கு இலங்கை அமைதி காக்கும் படையினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றின் காரணமாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலியின் கிடால் பகுதியில் உள்ள அவர்களது முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக