அல்ஹாஜ் அஹமட் முனவ்வர் தலைமையில் பல வகையான வகுப்புக்களைக் கொண்டு நடாத்தப்படும் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் இல் பெண்களுக்கான இலவச யோகா வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த யோகா வகுப்புகள் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்ற ஆயுர்வேத வைத்தியப் பிரிவின் மூலமே நடைபெறுகின்றது.
அதன் ஆரம்ப அறிமுக நிகழ்வு வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நிலைய மண்டபத்தில்
ஆரம்பமானது.
செல்வி பாலிஹா பாரிக்கின் கிராத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் , கிராம சேவகர் சம்பத் குமார அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
யோகா பற்றிய தெளிவினை வைத்தியர் உரையாற்றினார்.
அத்தோடு செயற்பாடுகளோடு கூடிய விளக்கங்களை தெளிவாகவும் தரமாகவும் வைத்தியர் சசிகா த சில்வா அவர்கள் விளக்கவுரை நடாத்தினார்.
அழகாகவும் அமைதியாகவும் இடம்பெற்ற நிகழ்வின் நன்றியுரையை முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் பெண்கள் பிரிவுத் தலைவி பௌஸியா ரசீத் அவர்கள் வழங்கினார்.
கருத்துரையிடுக