நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சூழலியல் சமாதான திட்ட இளைஞர்களின் முயற்சியில் அண்ணமலை நூலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு 14.05.2023 ஞாயிற்று கிழமையன்று இடம்பெற்றது.
இப்பிரதேசத்தில் காணப்படும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு மரநடுகையை ஊக்குவித்தல் மற்றும் சூழலியலுடனான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முன்னோடியான விடயங்கள் பற்றிய தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் PCA (சமாதானமும் சமூக பணியும்) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சூழலியல் சமாதான திட்ட இணைப்பாளர் திரு. N. பாஸ்கர், திட்ட உத்தியோகத்தர்களான திருமதி யாழினி, MMM. அஹ்னாப் , நாவிதன்வெளி பிரதேச நல்லிணக்க குழு உறுப்பினர் முகமது ரபீக், திருமதி கிருபை மலர் மற்றும் பிரதேச இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக