இலங்கைச்சூழலில் முஸ்லிம் பெண்கள் 
எனும் தலைப்பில் தொடர் ஆக்கங்கள் உரைகள் தெளிவுகள் நடுநிலை நோக்கில் இருந்து வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

1.இலங்கையின் கொதிப்பான சூழலை புரிந்து கொள்ளல்

2.பெண்கள் தமது அந்தஸ்த்தையும் பொறுப்புணர்வையும் சமநிலைக்கண்ணோக்கில் புரிதல்

3.பெண்கள் தரப்பிலிருந்து வேண்டிநிற்கும் நியாயமான மாற்றங்கள்
#அறிவு
#ஆன்மீக
#உளவியல்
#பொருளியல்
சார்ந்த பங்களிப்புகள்
#குடும்பம்
#சமூகம்
#தேசியம்
#கல்வி 
சார்ந்த பங்களிப்புக்கள்
என்று தலைப்பு விரிந்து செல்வதை நோக்கலாம்

பெண்களை சமநிலையாக புரிந்து வழிநடாத்தும் காத்திரமான பொறுப்பு நம் முன்னே ராட்சத மலையாக  உள்ளது மட்டும் புரிகிறது

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய  உரிமைகள் பயான்களில் பேசமட்டுமல்ல சமூக மாற்றசெயற்பாடுகளில் பயன்படுத்தவும் தான்.

 பயிற்றுவிக்கப்பட்ட
பெண் தலைமை 
பெண் நிர்வாகிகள்
 பெண்கள் அரபு மத்ரஸா 
மகளிர் பாடசாலைகளுக்கு கட்டாயம் தேவை.

பெண்களை
புரிந்து கொள்ள சர்வதேச  மகளிர் தின சிந்தனைகள் மட்டும் போதாது.
சுதந்திர தினத்தில் தேசப்பற்று பேசப்படுமளவாவது
மகளிர் தினத்தில் பெண்களின் அந்தஸ்து மகிமை உரிமை குறித்து சமுக பிரபலங்கள் பேச முனைவதில்லை
பெண்ணிலை ஒடுக்கல் ஓரங்கட்டல் ஒதுக்கல் போன்ற ஆழ ஊடுருவும் வேர்விட்ட கருத்துக்கள் ஆணிலை வாதிகளை மேம்பட்ட மனிதர்களாக தன்னிலை ஓங்கியவர்களாக சித்தரிக்கிறது. 

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிக்கு சிறந்தவர்.
இஸ்லாம் மிகவும் சிறந்த உயிர்த்துடிப்புள்ள பெண் ஆளுமைகளை வரலாறுநெடுகவும் கண்டுள்ளது. உருவாக்கியுள்ளது. இன்னும்பலரை உதாரணமாகவும் காட்டியுள்ளது.
பெண்களை கரிய  ஆடைகளுக்குள்ளால்  போர்த்தி முகமூடி அணிந்து  வதைக்கஇஸ்லாம் கற்றுத்தரவில்லை. இஸ்லாம் கூறும் பிரகாரம் பெண்கள் தம்மை தகவமைத்து வாழ்ந்தால் உலகில் எந்தப்பிரச்சினையும் வருவதற்கு இடம்  குறைவாகவே இருக்கும்.

பிள்ளைவளர்ப்பாகட்டும்.பிள்ளைகளின் ஆளுமை உருவாக்கமாகட்டும் அனைத்தையும் ஆணைவிட பெண்ணே  கனகச்சிதமாக  செய்துமுடிப்பாள்
இஸ்லாம்  பெண்களுக்கு வழங்கியுள்ளது  போல  எந்த  சமஉரிமையையும்   யாரும்   பெண்களுக்கு வழங்கவில்லை. வேறெந்த நவீன சிந்தனைகளும் போராட்டத்தின்  பின்னரே  தான்   பெண்கள்  தமக்காக வேண்டும் உரிமைகளை  மிகவும் கஷ்டத்துடன்  தவிர்க்கமுடியாமல் வழங்க முன்வந்தது.

ஆனால்  இஸ்லாம் போதிக்கும் பெண்ணியல்  சிந்தனைகளை  கருத்துக்களை  நடைமுறை வாழ்வில் பிரயோகிக்காமல்  இன்னும்கூட  கட்டுண்ட மூடுண்ட  சமூகமாக பெண்களை மார்க்கத்தின் பெயரில்  அழுத்தமாக்குவதை  இத்தினத்தில் நாம் வன்மையாக  கண்டிக்கின்றோம்
மார்ச் #எட்டு #8 மட்டும்தான்  மகளிர்தினம் என்றநிலைப்பாடு  இஸ்லாத்தில்  இல்லை.

உடலிச்சை தீர்க்க சமைத்துப்போட
துணிதுவைக்க பிள்ளைகளை பெற்று தள்ள வீடு வாசல் கூட்டி பெருக்க பாத்திரம் துவைக்க குழந்தைகளது மூத்திர துணி துவைக்க ஆடை கழுவி உலர்த்தி மடித்து வைக்க என நீளும் பட்டியலை நிரப்பத்தானா பெண் இது தானா நபி வழி நபி போதனை

பெண்ணை புரிந்தால் ஆணின் ஆயிரம் பிரச்சினைகள் மறைந்தோடும்
புரிய சிரமமான புதிரல்ல பெண்
அவள் ஆணின் பாதி
உபகூறு
அவனில் இருந்து வந்தவள் தான் பெண்

மேலதிக தேவையும் ஈடுபாடும் கொண்டவர்கள் மேற்படி நூலை கையிலெடுங்கள்
கண்ணில் படுத்துங்கள்

Understand Women Better helps men understand the nature of the female better and to experience deep intimacy with a woman. The book goes in-depth about how to utilize masculine & feminine dynamics in order to experience the best intimate life, connection and sex possible. As a woman, it will help you to find the courage to be a highly radiant and sensual woman in today’s world and to recognize how easy it is to embody your wildest feminine nature.

அஷ்ஷெய்க் பிஸ்தாமி அஹமட் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.