சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது
திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் 5 டிங்கி படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
18 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட குறித்த மீனவர்கள் துறைமுகம், கிண்ணியா, மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
கருத்துரையிடுக