கொழும்பு மருதானை புகாரி தைக்காவில்
117 ஆவது வருடாந்த கந்தூரிப் பெருவிழா
கொழும்பு - மருதானை, இமாமுல் அரூஸ் மாவத்தையில் அமைந்துள்ள, அல் மஸ்ஜிதுல் புகாரி தைக்காவில் 117 ஆவது வருடமாக நடைபெறும் வருடாந்த பெரிய கந்தூரி தமாம் வைபவம், எதிர்வரும் 21 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் அஷ்ஷெய்க், அல் அல்லாமா, அப்ழழுல் உலமா (மதுரை பல்கலைக்கழகம்) தைக்கா நாஸிர் சுஐப் ஆலிம் (பீ.ஏ. - அல் அரூஸி, பாஸில் ஜமாலி, ஜலாலி) அவர்களின் தலைமையில் ஆரம்பமாகும்.
அன்றைய தினம், ஸில்ஸிலா மஜ்லிஸ் மற்றும் ஏனைய கஸீதா பைத் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதோடு, ழுஹர் தொழுகைக்குப் பின்பு பிற்பகல் 1.30 மணியளவில் பகற்போஷண விருந்தும் வழங்கப்படவுள்ளதாக, புகாரி தைக்கா நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ. காதிர் கான்
கருத்துரையிடுக