எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் கியூ.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடந்த வாரத்தில் கியூ.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விற்பனை 60 சதவீதமாக இருந்து, தற்போது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை பண்டிகை கால எரிபொருள் தேவைக்கு ஏற்ப, அடுத்த சில நாட்களுக்கு தினசரி எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக