நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8% ஆக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது.
குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13% ஆகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3% மற்றும் 15% கொள்ளளவாகவும் உள்ளது.
இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34% ஆகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84% ஆகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38% ஆகவும் உள்ளது.
கருத்துரையிடுக