கொத்து, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு
கொத்து, உணவுப் பொதி மற்றும் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துரையிடுக