சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ரயில் மார்க்கங்களை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக