⏩ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது பொலன்னறுவையில் இருந்து வீட்டுக்கடன்கள், உதவிகள் மற்றும் வீட்டு உரிமைப் உறுதிப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்தல்...
⏩ இந்த ஆண்டு 2,000 வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம்...
⏩ கம்பஹாவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலயை போராளிகள் என அழைக்கப்படுபவர்கள் படுகொலை செய்தமைக்காக அமைச்சர் பிரசன்ன பொலன்னறு மக்களிடம் மன்னிப்பு கோரினார்...
⏩ ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டம் தொடர்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக அமைச்சர் பிரசன்ன மீண்டும் வலியுறுத்தினார்...
கம்பஹா நிட்டம்புவவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலை போராளிகள் என அழைக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டமைக்காக கம்பஹா பிரஜை என்ற வகையில் பொலன்னறுவை மக்களிடம் மன்னிப்பு கோருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
போராளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களைக் கொல்லவும் வீடுகளை எரிக்கவும் விரும்புவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
போராட்டம் என்ற பெயரில் கொலைகள், உடைமைகள் எரித்தல் மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
நேற்று (29) பொலன்னறுவை, ஹிகுரக்கொட, தாருக மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வீட்டு உரிமை உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு ஹிகுரக்கொட பிரதேச செயலகத்தினால் 197 பயனாளிகளுக்கு காணி உரிமைப் பத்திரங்களும் 43 பயனாளிகளுக்கு காணி ஒதுக்கீடு பத்திரங்களும் வழங்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பொலன்னறுவை சி.ஐ.சி. வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 86 பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களும், 12 பயனாளிகளுக்கு " உங்களுக்கு வீடு - நாட்டடுக்கு நாளை" வீடமைபுத் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியில் வீட்டுதவிகளும் வழங்கப்பட்டன
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மாவட்ட மட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீடமைப்பு உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. முதலாவது பொலன்னறுவையில் இருந்தே செய்யப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது தற்போது தோட்டப்புற வீடுகள், கிராமிய மற்றும் நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை " வீடமைப்புத் திட்டம் மற்றும் "மிஹிது நிவஹன" வீடமைப்புத் திட்டம் ஆகியவை அவற்றுள் பிரதானமானவை.
அத்துடன், கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இடையில் நாடளாவிய ரீதியில் 1,890 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
சொந்த வீடு வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவாகும். தனக்கென ஒரு நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை பல்வேறு காலகட்டங்களில் இதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு அமைச்சர் வரும்போதும் ஒவ்வொரு எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினார்கள். அதை பல்வேறு பெயர்களில் செயல்படுத்தினார்கள். இவை அனைத்தும் நடந்தன. நாட்டு மக்களின் வீட்டுத் தேவைகளை ஆதரிப்பது. அமைச்சர்கள் மாறியதும், முந்தைய அமைச்சர் நிறுத்திய திட்டத்தை, புதிய அமைச்சரும் வேறு பெயரில் தொடர்ந்தார். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த காலங்களில் வீட்டு உதவி, வீட்டுக் கடன் திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த முடியவில்லை. தற்காலிக பின்னடைவை சந்தித்தது. ஆனால் இப்போது நாடு மிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானித்தோம். அதன்படி இன்று இந்த வீட்டுரிமை பத்திர மானியம் மற்றும் வீட்டுக்கடன் தவணைகள் மீண்டும் வழங்கப்படுகின்றன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது நாடு முழுவதும் பல்வேறு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இவர்களுக்கு வீட்டுரிமப் பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு நான் செயற்பட்டேன். இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட சுமார் 2000 வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்க முடியாத வீட்டுரிமைப் பத்திரம் இல்லாதவர்களுக்கு வீட்டுரிமை பத்திரம் வழங்கப்படும். இந்த அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டங்களின் பயனாளிகளுக்கு, அவர்களின் அடுத்த தவணை இப்போது மாவட்ட அளவில் செய்யப்படுகிறது. தற்போதைய வீட்டுக் கடன் மற்றும் உதவித் திட்டங்கள் விரைவில் நிறைவேறும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அரசியலுக்கு வந்த வழி இது. இவரைப் போன்ற அப்பாவிகள் இந்த நாடாளுமன்றத்தில் இல்லை. எனது மாவட்டத்தில் அவர் கொல்லப்பட்டார். அதற்காக நான் இன்னும் வருந்துகிறேன். அண்மைய போராட்டத்தில் திரசன்னும் ஹிவல்லுவும் வெளியே வந்த காலம். அவரைக் கொல்ல அவர் என்ன தவறு செய்தார்? அமைச்சர் சிறிபால கம்லத்தின் வீடு எரிந்தது ஏன்? கிராமத்திற்கு எந்த வேலையும் செய்யாமல் விமர்சனம் மட்டும் செய்தால், இருக்கும் மனிதனைப் பார்த்து பொறாமைப்பட்டால் அது வேறு யாருமல்ல, ஜே.வி.பி. தான்.
அமரகீர்த்தி அத்துகோரல அவர்களுக்காக பொலன்னறுவை மாவட்ட மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். சமூக வெறுப்பாளர்கள் ஒரு குழு தான் அதைச் செய்தது.
எங்களைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் இந்த நாட்டையே முதலில் மதிப்பார்கள். இந்த நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ தீர்மானித்தோம். அவர் ஆற்றிய பணி தொடர முழு ஆதரவு தருகிறோம். மொட்டுக் கட்சியை மீண்டும் அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சிலர் நினைக்கிறார்கள். அதனால்தான் கடந்த காலங்களில் எமது கட்சி தொடர்பில் பல்வேறு பொய்கள் விதைக்கப்பட்டன. இந்த கட்சி மக்களின் கட்சி. நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் போது, இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறோம். கிராமத்து மொட்டின் சக்தி இன்னும் அப்படியே இருக்கிறது. அதற்கு சில அரசியல் கட்சிகள் பயந்து இந்த சதிகளை செய்கின்றனர்" என்றார்.
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் சமரவிக்ரம, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, அதன் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, பொலன்னறுவை மேலதிக மாவட்ட ஆணையாளர் ஆர்.எம்.கே.ஆர்.பி. ரத்நாயக்க, ஹிகுரக்கொட பிரதேச செயலாளர் ஹர்ஷ பண்டார, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் சமிந்த தென்னகோன் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக