வரிக் கொள்கை தொடர்பில் IMF விசேட அறிவிப்பு


இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.