இன்று மாலை இடியுடன் கூடிய மழை!
இன்று, மேல் சப்கரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அநுராதபுரம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக