மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் (11)
லீக்ஸ் ஒரு கிலோகிராம் 120 முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும்,
கரட் ஒரு கிலோகிராம், 80 முதல், 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும்,
போஞ்சி ஒரு கிலோகிராம் 250 முதல், 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் *விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு மெனிங் சந்தையின் தேசிய அமைப்பாளர் எச்.எம் உபசேன தெரிவித்தார்.*
அத்துடன், ஒரு கிலோகிராம்
கோவா 30 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும்,
தக்காளி ஒரு கிலோகிராம் 200 முதல் 220 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளிலும்,
பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக *கொழும்பு மெனிங் சந்தையின் தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டார்.*
இந்நிலையில், யாழ்பாணத்தில் இருந்து, அதிகளவில், வெங்காய தாள், பச்சை மிளகாய், பீட்றூட் மற்றும் உருளைக் கிழங்கு என்பன கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, யாழ்ப்பாணத்திலிருந்து கறிமிளகாய் அதிகளவில் கிடைக்கப்பெறுகின்றமையால் அதன் ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்துரையிடுக