மகளிர் தினம்
```கருவிலே தொடங்கும் உரிமைக் குரல்
காலமுழுதும் போராடும் பீனிக்ஸ் பறவை
சுவரில் அறையப்பட்ட துருப்பிடித்த ஆணியாய்
குடும்ப சிலுவையைச் சுமக்கும் சுமைதாங்கியாய்
உருண்டு விழும் தாயமாய்ப் புரள்கிறாள்
உரசிப் பார்க்கும் தங்கமாய் உருகுகிறாள்
மகளாய் மனைவியாய் அன்னையாய் சகோதரியாய்
மாறி மாறி போடப்படும் முகமூடி
சுயத்தைத் தொலைத்து முகம்தேடும் தேவதை
சுயநலம் சிறிதும் இல்லாத இல்லாள்
முப்பத்துமூன்று சதவிகித ஒதுக்கீட்டைப் புறந்தள்ளி
சமையலறை கோட்டைக்கு முடிசூடா ராணியாகி
அடுத்தவர் பசிதீர்க்க அடுக்களையில்
பணியாற்றி
அலுக்காத உழைப்பில் சலிக்காத பெண்ணரசி
மூன்றுநாள் இயற்கை தரும் கொடுமை
மூன்று முடிச்சில் முடங்கிடும் இளமை
இலட்சியங்கள் தகர்ந்திடும் பிள்ளை வளர்ப்பில்
இலக்குகள் கனவாக அவள் வாழ்வில்
இறக்கும்வரை உறவுகளுக்காய் உழைத்து வாழும் பெண்களுக்கு கொண்டாட ஏது தினம்...!!!```
*மகளிர் தின நல்வாழ்த்துக்கள்*
_நஸ்லுன் ஷாரா_
_நாம்புளுவை, பஸ்யாலை._
கருத்துரையிடுக