கண்டியை உலுக்கிய விபத்து - பாடசாலை மாணவன் பலி!
கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, மாதபோவல பிரதேசத்தை சேர்ந்த கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்..
மாணவன் கைப்பேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் செல்லும் மேம்பாலத்தில் செல்லாமல் ரயில் வீதியை கடக்க முற்பட்ட போது ரயில் அடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக