திடிரென உயர்ந்த தங்கத்தின் விலை!
கடந்த சில நாட்களாக கடுமையாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (09) பதிவாகியிருந்த 134,000 ரூபாவாக இருந்த 22 கரட் தங்க நாணயத்தின் விலை இன்று 160,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 145,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க நாணயத்தின் விலையும் 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக