அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பயிற்சிப் பட்டறை
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தெஹிவளையில் சம் சம் பவுண்டேசனின் கூட்ட மண்டபத்தில் களுத்துறை மாவட்த்தினைச் சேர்ந்த 75 இளைஞர்கள், யுவதிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில் ஆற்றல் அபிவிருத்தி என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நேற்று 18ஆம் திகதி நடைபெற்றது. இதில அம் மாவட்த்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவ மாணவிகள், பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் லுக்மான் சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாழிப முன்னணியின் தலைவர் எம்.எம். ஜவ்பர், பாராளுமன்ற உறுப்பிணர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் முன்னாள் தலைவர் என் .எம் அமீன், பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி சுகையிர் ஹம்துல்லலாஹ் தார் செய்யத். ஆகியோர் கலந்து கொண்டனர்
விரிவுரையை யாசிர் லாஹிர் நிகழ்த்தினார்
இந் நிகழ்வில் எதிர்காலத்தில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியில் சகல இளம் யுவதிகளையும் சகல மாவட்டங்களிலும் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளவதற்கும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆலேவசனையை முன்வைத்தரர். அங்கு வருகை தந்திருந்த பெண்களுள் 90 வீதமான யுவதிகள் பல்கழைக்கழகங்களில் பட்டதாரிகளாக உள்ளதாகவும் சகல துறைகளிலும் பெண்கள் சட்டக்கல்லுாாி, பல்கழைக்கழகங்கள், அரச தொழில்களில் ஆண்களை விட கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்தாா்
கருத்துரையிடுக