விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகர செய்தி
3 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்தக் கப்பலில் 36,000 மெட்ரிக் டொன் TSP உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதேபோன்ற மேலுமொரு சேற்று உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.
ஐ நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த சேற்று உரம் (TSP) வழங்கப்பட்டுள்ளது. 2022/23 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்ட அத்துடன், 2023 சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டில் உள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் இந்த சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக