யாழில் கோர விபத்து - 27 வயது இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.
இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
கருத்துரையிடுக