ஒரே நாளில் 1,890 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 437 பேர், குஜராத்தில் 402 பேர், கேரளாவில் 321 பேர், கர்நாடகாவில் 155 பேர், டெல்லியில் 139 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 63 ஆயிரத்து 883 பேர் நலம் பெற்றுள்ளனர். இதில் நேற்று 1,051 பேர் அடங்குவர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,433 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 832 அதிகமாகும்.
கருத்துரையிடுக