"துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000 ஆக இருந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமா?"


   

"துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000 ஆக இருந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமா?"


துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

“.. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கைளை மேற்கொள்கிறார்கள் உன்மைதான், அவர்கள் துறைமுக காணிகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை.


துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா. அது தவிர மூன்று வேளை உணவு, போனஸ் கொடுப்பனவு, மேலதிக சலுகைகள் என நிறையவே கொடுக்கிறோம். அப்படி இருக்கவும் இவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது நியாயமா..?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

கருத்துகள்