15 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது
எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என,
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள்,
மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
கருத்துரையிடுக