நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பின்மை 20% வரை அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் மனித வள மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் P.H.C.ஷிரோமாலி தெரிவித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக