வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு ; நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்திருந்தனர்.

இப் போராட்டத்திற்கு, நுவரெலியா மாவட்ட ஆதார பொது வைத்தியசாலை வைத்தியர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். 

இவ் போராட்டத்தினால் மாவட்ட பொது , வைத்திசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாகத் தடைப்படுள்ளது.இந்நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  சத்திரசிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு போன்ற விசேட சேவைகள் 
என்பன வழமைபோல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .

தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறை , மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா மாவட்ட பொது  அரச வைத்திய அதிகாரிகள் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகி , சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.