"என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள், நான் உங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்"

சிரியாவின் வடக்குப் பகுதியில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இரு பிள்ளைகள் சுமார் 36 மணி நேரத்திற்குப் பிறகு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற திங்கள்கிழமை (6 பிப்ரவரி) நேர்ந்த நிலநடுக்கத்தின்போது தூங்கிக்கொண்டிருந்த அந்தக் குடும்பம் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது.

"என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள், நான் உங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்,"

என மரியம் என்ற அந்தச் சிறுமி மீட்பாளர்களிடம் கூறுவது காணொளியில் தெரிகிறது.

"நான் உங்கள் பணியாளராக இருப்பேன்" என்று மரியம் கூறுகையில், அதற்கு அந்த மீட்பாளர் "இல்லை, இல்லை" எனப் பதிலளித்தார்.

மரியம் அன்பாகத் தமது தம்பியின் தலையைத் தடவிவிடுகிறார்.

தம்பியின் முகத்தில் தூசி விழாமல் தமது கையை வைத்து மறைத்துக்கொண்டார்.

தம்பியின் பெயர் இலாஃப் (Ilaaf) என்று அவர்களின் தந்தை முஸ்தஃபா ஸுஹிர் அல்-சயிட் (Mustafa Zuhir Al-Sayed)
இலாஃப் என்பதற்குப் பாதுகாப்பு என அர்த்தம்.

இரு பிள்ளைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் பெற்றோரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சிரியாவில் நிலநடுக்கத்தில் சுமார் 12,000 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

பல குடும்பங்கள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.