யாழ்.நகரம் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்திய அரசாங்கத்தின் நிதி
நன்கொடையின் கீழ்
நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண
கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு
மற்றும் இலங்கையின் சுதந்திர நாள்
நிகழ்வுகள் என்பன இன்று மாலை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
பிரதமர் தினேஷ் குணவர்த்தன
ஆகியோரின் பங்குபற்றலுடன்
நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்
சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு
தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள்
இன்றையதினம் போராட்டங்களில்
ஈடுபடவுள்ளதாக நேற்றையதினம்
அறிவித்திருந்தன.
இந்நிலையில் யாழ் நகரின் பாதுகாப்பு
நேற்றுமாலை முதல்
பலப்படுத்தப்பட்டுள்ளது

குறிப்பாக யாழ் போதனா
வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு
வீதி, பண்ணை வீதி, ஏ9 வீதிகளில்
ஏராளமான பொலிஸார் மற்றும்
இராணுவத்தினர் பாதுகாப்பு
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அதேவேளை சற்றுமுன் யாழ் நகர் பகுதியில்
பாதுகாப்பு தரப்பினருக்கு
மேலதிகமாக கலகமடக்கும்
பொலிஸாரும்
வரவழைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.