‘தேர்தலும் இல்லை, பணமும் இல்லை’ : ஜனாதிபதி
தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை, எங்களுக்குத் தெரிந்தவரை தேர்தல் திகதி இன்னும் பெயரிடப்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக தேர்தல் திகதி எதுவும் இல்லை. சிலர் மார்ச் 9 கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை, அதை வைத்து எந்த சட்ட முடிவும் எடுக்க முடியாது.
தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்தேன்.
இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
உறுப்பினர் எண்ணிக்கையை 5,000 ஆக குறைக்க தேர்தல் ஆணையத்திடம் கூறினேன். தற்போது தேர்தலும் இல்லை. தேர்தலுக்கு பணமும் இல்லை. பணம் இருந்தாலும் வாக்குகள் இல்லை. அதனால் என்ன செய்வது? என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக