உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று வரலாற்றில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பலம் வாய்ந்த நாடான தென்னாப்பிரிக்கா முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி, ஆடவர் அல்லது பெண்கள் என எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பதில் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கருத்துரையிடுக