மின்வெட்டு தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை!

 இன்றைய தினம்(01) மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 மின் உற்பத்திக்காக மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் மகாவலி நீர் முகாமைத்துவ செயலகத்தினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தலுக்கு அமைய இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் குறிப்பிட்டார்.

 இந்நிலையில் மின் உற்பத்திக்காக மேலதிக நீர் விடுவிக்கப்பட்ட காரணத்தினால், நேற்றும்(31), நேற்று முன்தினமும் (30) மின் விநியோகம் துண்டிக்கப்படவில்லை.

 மேலும் இன்றைய மின்வெட்டு தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.