தனது அரசாங்கம், உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் வலியுறுத்தி உள்ளார்.
அவ்வாறு ஒத்தி வைப்பதற்கு தேர்தல் ஒன்று நாட்டில் நடைபெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அதற்கு பணம் ஒதுக்குவதோ அச்சுப்பணிகளை மேற்கொள்வதோ சட்டப்பூர்வமானது இல்லை.
தேர்தல் ஒன்றை தற்போது நடத்துவதற்கு நாட்டில் போதிய நிதியும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக