பயாஸா பாஸில் எழுதிய
‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’
என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு Zoom காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரி, மூத்த எழுத்தாளர், கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் கலந்துகொள்ளவுள்ளார்.
கெளரவ அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கலந்துகொள்வர்.
மேலும், சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி) (பஹன மீடியா பிரைவட் லிமிடெட்) அவர்களும், ‘நியூஸ் நவ்’ ஆசிரியரும் மீள்பார்வை பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான பியாஸ் மொஹமட், மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அனைவரும் அன்புடன் அழைக்கிறார் நூலாசிரியை.
சியன மீடியா சேர்கிள் மற்றும் சியன நியூஸ் இணையத்தளம் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
பயாஸா பாஸில் எழுதிய "என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்"
நூல் வெளியீடு விழா
02.02.2023
(வியாழக்கிழமை) இரவு 7.00 மணிக்கு
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/84116625988?pwd=OFQvOVUyM3ByOG5xQkpKMGZkY25wZz09
Meeting ID: 841 1662 5988
Passcode: 1234
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வெளியீடு: ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு
கருத்துரையிடுக