விஜயின் அம்மாவுக்கு மூன்றாவது திருமணம்?

பிரபல மூத்த நடிகை ஜெயசுதா. இவர் பாலசந்தரின் ´அரங்கேற்றம்´, ´சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், முதல் கணவர் வடே ரமேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்.

பின்னர் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவரது கணவன் கடந்த 2017-ம் ஆண்டு நிதின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா, இப்போது மீண்டும் நடித்து வருகிறார். விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் விஜயின் அம்மாவாக நடித்திருந்தார்.

இவர் தனது 64 வயதில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியானது.

அதை ஜெயசுதா மறுத்திருந்தார். இந்நிலையில், ஜெயசுதாவும் அந்த தொழிலதிபரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.