75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Path to Freedom” (சுதந்திரத்திற்கான பாதை) புராதன பொருள் கண்காட்சி கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இந்தக் கண்காட்சி நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய அருங்காட்சியகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இந்தக் கண்காட்சி கொழும்பு அருங்காட்சியகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
கருத்துரையிடுக