துருக்கி - சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது!
துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்து விட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவும் பாதிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆயிர கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
இந்நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43.556 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக