IMF இற்குச் செல்லாமல் தற்போதிருக்கும் நிலையில் இருந்து மீள்வதற்கு பொது மக்களிடம்மிருந்தும் வரியை அதிகரிக்க வேண்டி வரும்-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

IMF இற்குச் செல்லாமல் தற்போதிருக்கும் நிலையில் இருந்து மீள்வதற்கு பொது மக்களிடம்மிருந்தும் வரியை அதிகரிக்க வேண்டி வரும்-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-

IMF யை நம்பாமல் தற்போதிருக்கும் நாட்டின் நிலையில் இருந்து மீள்வதற்கு அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வரியை அதிகரிக்க வேண்டியுள்ளது.. 

எது எவ்வாறு இருந்தாலும் நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்திலிருந்து மீள ஒரேவழி IMF மாத்திரமே. 

இதைத்தவிர எமக்கு எந்தவொரு மாற்று வழியும் எமக்கு தென் படவில்லை. 

இதன் மூலம் எமக்கு நிதி உதவி மாத்திரம் அல்ல சர்வதேச நிதி நடவடிக்கைகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான உத்தரவாதமும் IMF இடமிருந்து கிடைக்கும்

இரண்டு வருடத்திற்கு முன்னர் IMF க்கு சென்றிருக்க வேண்டும். அன்று அமைச்சரவை அமைச்சர்கள் அது குறித்த விவாதத்தில் மாத்திரமே ஈடுபட்டு வந்தார்கள்.

அன்று IMF எந்தவிதமானதொரு நிபந்தனைகளை விதிக்கவில்லை. எம்மை நிலையான தன்மைக்கு இட்டுச் செல்ல வழிகாட்டல்கள் மாத்திரமே தர நினைத்தார்கள் அதுவும் எம்மை நிலையான தன்மைக்கு கொண்டு வருவதற்காகும்.
.
ஆனால் இதிலிருந்து மீள்வதற்கு நாம் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.. தற்போது IMF பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. நாம் எதிர்பார்த்துள்ள இடத்திற்கு செல்ல முடியும்.

எனவேதான் அதிகரிக்கப்பட்ட வரியை மீண்டும் ஒரு முறை உயர்த்துவது கட்டாயமாக இருக்கின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்

கருத்துகள்