பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.
சில முக்கியமான நாட்களை கடக்கிறோம். 2022 இந்நாட்டில் மோசமான அணுகுமுறையை எட்டிய ஆண்டாகும். 2022 இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நாடாக மாற்றப்பட்டது.கடந்த 100 வருடங்களில் நாம் வீழ்ந்துள்ள நிலைமை இலங்கைக்கு ஒரு மோசமான பிரதிபிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.எதிர்வரும் 2023 ஆம் ஆண்டாவது வக்குரோத்து நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நம் அனைவரினதும் நம்பிக்கையாகும். பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆண்டாக மாற்ற வேண்டும்.அந்த ஆசையோடுதான் அடுத்த ஆண்டு உதயமாக வேண்டும் என ஐ ம சக்தி பிரார்த்திக்கிறது.
நாங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றோம். ஆனால் அரசாங்கம் தேர்தலைத் தவிர்ப்பதற்கும், மக்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் இருப்பதற்கும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது. ஒன்று,இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூற ஆரம்பித்துள்ளனர். மறுபுறம் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சர்களும் கூற ஆரம்பித்துள்ளனர்.அது இப்போதைக்கு தேவையில்லை என்கிறார்.இப்படி சொல்வதற்கு முக்கிய காரணம் தேர்தல் பயம். ஆளும் தரப்பாக பொதுஜன அபிப்பிராயத்திற்கு அஞ்சாமல் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதை தவிர்த்து வருவதாகவும் அச்சம் கொள்வதாகவும் கூறுகின்றது. எனவே, எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
குறிப்பாக,கலந்துரையாடல்களில் சந்திப்புகளில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி அரசியலமைப்பு ரீதியாக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, இந்த வாரம் தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி மற்றும் தேவையான சட்ட வர்த்தமானி போன்றவற்றை அறிவிக்கும் என நம்புகிறோம்.
இத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, இது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக இந்த வாரம் அனைத்து அமைப்பாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.எங்களிடம் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன,அந்த விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய குழுக்களுக்கு இடமளிக்க இந்த வாரம் விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்யத் தொடங்குவோம்.
இதேவேளை, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை முக்கியமான தேர்தலாகக் கருதி இளைஞர்,யுவதிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.மேலும், இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் உள்ளதால், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கு, அதிக இளைஞர், பெண் பிரதிநிதித்துவத்தை பயன்படுத்துவோம்,ஒதுக்குவோம் என்பதை நாம் ஒரு கட்சியாக தெளிவாக கூறுகிறோம்.
எனவே எக்காரணம் கொண்டும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம். ஏற்கனவே நீதிமன்றம் சென்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம். மேலும் மக்கள் பேரணிக்கும் தயாராகி வருகின்றோம். தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து தேர்தலை கோருவோம்.எனவே,தேர்தலுக்கு காரணம் சொல்ல முயற்சிக்காதீர்கள், தேர்தலுக்கு பணம் இல்லை, பொருத்தமான சூழல் இல்லை என்று கூறி தவிர்க்க முயற்சிக்காதீர்கள் என அரசுக்கு கூறுகிறோம்.
இன்று நாம் மிகவும் மோசமான மற்றும் பலவீனமான பொருளாதார நிலையில் இருக்கிறோம்.மக்கள் நாளை எப்படி வாழ்வார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.2023-ம் ஆண்டுக்காக எத்தனை எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அந்த ஆண்டில் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.ஏனெனில் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, அந்த பொருளாதாரத்தை உயர்த்தி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பெரிய பொறுப்பு,அதை நான் காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அதை காணவில்லை.
ஆயத்தமில்லாத அரசாங்கமாக அடுத்தாண்டை வரவேற்கப்போகிறது.
ஜனாதிபதி மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நடத்துவதையும், அதிகாரிகளுடன் பேசுவதையும், அதிகாரிகளை அச்சுறுத்துவதையும் நாம் பார்க்கின்றோம்.இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த நாடு எதிர்நோக்கும் உண்மையான சவாலை புரிந்து கொண்டு அரசாங்கத்தை கொண்டு வருவதே மிக முக்கியமாகும். அதைக் கடக்க ஒரு கொள்கை ரீதியான அணுகுமுறை தேவை.அப்படியான ஏற்பாடுகளை நான் பார்க்கவில்லை. சரிந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான பொருளாதார திட்டம் என்ன?உற்பத்தியை அதிகரிக்க என்ன திட்டம்?அப்படிப்பட்டதை வரவு செலவுத்திட்டத்தில் கூட காணவில்லை.வரவு செலவு திட்டம் என்பது சம்பிரதாய எடுகோள்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.
கடந்த 6 மாதங்களில் நாங்கள் எதிர்கொண்டுள்ள பணப் பரிமாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் கூட எத்தகைய முன்னேற்றத்தையும் நான் காணவில்லை.
சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மூலம் நாம் இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறோம், அரசாங்கம் வெவ்வேறு கதைகளைப் பேசுகிறது,ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்பாடு நிச்சயமற்ற மட்டத்தில் நடக்கிறது.இவற்றை விரைவுபடுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒரு தேசிய வேலைத்திட்டம், ஒரு தேசிய செயல் திட்டம் பற்றி விவாதிப்பதில்லை.ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் பிரதானமாக நாட்டு மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்துகின்ற வர்த்தமானி அறிவித்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு வந்துள்ளதையே காணக்கிடைக்கிறது. ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் நிலையில்,தனி நபர் மற்றும் நிறுவனங்களின் வரி உயர்வை பலவற்றையும் சேர்த்து, வேறு வழியின்றி மக்களை நசுக்கியுள்ளது அரசாங்கம்.
அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏனெனில், சில மாதங்களுக்கு முன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால், அதை செலுத்த வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். கடந்த மாதத்தில் 27% மின்சார பாவனையை மக்கள் குறைத்துள்ளதை பார்த்தேம்.எண்ணெய் நுகர்வு ஐம்பது சதவீதம் குறைந்துள்ளதாக நேற்றைய அறிக்கையொன்றில் பார்த்தேன்.நுகர்வு குறைவடைந்து செல்கிறது.
இந்த பொருளாதாரத்தை மக்களால் தாங்க முடியாததால் மக்கள் நுகர்வை குறைத்து விட்டனர்.அதனால், மக்கள் வாழ்வதற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் சிரமத்தில் உள்ளனர். இன்று ஆஸ்பிரின் மாத்திரைகள் கூட வைத்தியசாலைகளில் கிடைக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.மருத்துவமனைகளில் என்ன இருக்கின்றது என்று பேப்பரில் எழுதி தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்குமாறு கேட்கின்றனர்.மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்கிறது.
ஜனாதிபதியின் பொருளாதர நிர்வாகத்தை எம்மால் சரி காணமுடியாது.அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதனால் அண்மைக்காலமாக நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான அதிகாரிகளை நியமித்து வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.மத்திய வங்கி சம்பவம் என்று வரும்போது, அர்ஜுன மகேந்திரனின் சம்பவம் அப்போது நிலவிய நல்லாட்சியின் வீழ்ச்சியை முற்றாக பாதித்ததுடன், ஏற்பட்ட பொருளாதார விளைவுகளின் முழு பலனையும் இந்நாட்டு மக்கள் செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு இப்போது யார் பொறுப்பேற்க வேண்டும், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குழுக்கள் நாட்டைச் சரியாக வழிநடத்த முயலாமல், தன்னிச்சையான தொல்லைகள், ஊழல்கள், திருட்டுகள் அனைத்தையும் செய்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது.
ஜனாதிபதி தலைமையில் நாட்டை ஆளும் குழுவே பொறுப்புக் கூற வேண்டும்.எனவே, இது மிகவும் மோசமான சரிவு என்று தெளிவாகக் கூறுகிறோம்.
இவ்வருடத்தில் நாட்டிற்காக அரசாங்கம் ஆற்றிய சேவையில் இன்று நாட்டில் எவரும் திருப்தியடையவில்லை.காரணம் மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்திருந்தால், துரதிஷ்டவசமாக ஒருவகையான எழுச்சி ஏற்பட்டிருக்காது. எனவே, குறைந்தபட்சம் 2022 இல் நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து 2023 ஐ புதிய வழியில் தொடங்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
அது வெற்றியடைய வேண்டுமானால் தற்போதைய ஜனாதிபதியாலும் அரசாங்கத்தாலும் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஒரு குழுவைக் கொண்டு ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம்.அதுதான் உண்மை, இந்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு ஏற்ப அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே 2023 இல் புதிய நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன். இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும், பொதுத் தேர்தல் நடத்தப்படுமாயின் புதிய அரசாங்கத்தையும்,புதிய சர்வஜன வாக்கெடுப்பு மூலம் புதிய நாட்டையும் கட்டியெழுப்ப நாம் தயாராகவுள்ளோம் எனவும் கூறுகிறேன்.
கருத்துரையிடுக