இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளுக்கான அவசர கடன் மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு சீனா சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
IMF முகாமைத்துவ பணிப்பாளருக்கும், சீனப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக