COVID சட்டங்களில் திடீர் திருத்தங்கள்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு விதிக்கப்பட்ட கொவிட் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் அமுல்படுத்தப்பட்ட பல சட்டங்கள் ரத்து செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
விமானம் அல்லது துறைமுகம் மூலம் இலங்கைக்கு வருபவர்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இனி கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டிற்குள் வருகைத் தருவதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டிய கொவிட் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை அறிக்கையை இனி சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக