இலங்கை தமிழ் அரசியலில் சம்பந்தன் மகத்தான மனிதரென புகழாரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எரிக் சொல்ஹெய்ம் திங்கட்கிழமை (19) மாலை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடன் இருந்தார்.இது தொடர்பாக கருத்துக் கூறிய எரிக் சொல்ஹெய்ம்,இலங்கை தமிழ் அரசியலின் மகத்தான மனிதருக்கு மரியாதை செலுத்துவதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.மேலும், இலங்கையின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும், அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் சம்பந்தன் என்னிடம் கூறினார் – என்றார்.தமிழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் இடம்பெற்றதாக எம.ஏ.சுமந்திரன் ருவிற்றரில் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.