ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக